india

img

கொரோனா மரணங்களை எவராலும் தடுக்க முடியாது.... வயதானவர்கள் எல்லாம் இறந்துதான் ஆக வேண்டும்... ம.பி. பாஜக அமைச்சர் பேச்சு...

போபால்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ளது. மகாராஷ்டிரா, தில்லி, குஜராத், சத்தீஸ்கர், உத்தரகண்ட், ராஜஸ்தான் என பல மாநிலங்களில் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசமும் முக்கியஇடத்தில் உள்ளது. கடந்த 15 நாட்களில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மட்டும் 51 பேர் அங்கு பலியாகியுள்ளனர். புதன்கிழமையன்று இரவு ம.பி. மாநிலம் சிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த முதியவருக்கு, மருத்துவமனை நிர்வாகம் திடீரென ஆக்சிஜனை துண்டித்த தால், அந்த முதியவர் இறந்தேபோனார். 

இந்நிலையில், மத்தியப்பிரதேச கால்நடை பராமரிப்பு, சமூகநீதி மற்றும்ஊனமுற்றோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் பிரேம்சிங் படேல், ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றைஅளித்துள்ளார். அதில், ‘கொரோனா வால் ஏற்படும் மரணங்களை எவராலும் தடுக்க முடியாது. கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள் என்று எல்லோருமே சொல்கின்றனர். ஆனாலும், ஒவ்வொரு நாளும் மக்கள் செத்து மடிகிறார்கள். மக்களுக்கு வயதாகி விட்டால் சாகத்தான் வேண்டும்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

;